ஜம்மு - காஷ்மீர் மலையில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி!

Published By: Vishnu

21 Apr, 2026 | 03:47 AM
image

இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் இருந்து திங்கட்கிழமை (ஏப்.20) காலை உதம்பூர் மாவட்டம் நோக்கி 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

காலை 10 மணியளவில், ராம்நகர் பகுதியில் உள்ள காகோர்ட் கிராமம் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவரில் மோதி மலையிலிருந்து விழுந்து பள்ளத்தில் உருண்டது.

அப்போது கேட்ட அலறல் சத்தத்தால் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, சிதறிய பேருந்தில் சிக்கி காயமடைந்த பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன், மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினரும் பிற மீட்புக் குழுவினரும் இணைந்து, காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்தில் 15 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்த பயணிகளுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10