இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி இலங்கையிலிருந்து புறப்பட்டார்

Published By: Vishnu

20 Apr, 2026 | 07:34 PM
image

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், திங்கட்கிழமை (20) பிற்பகல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தனது விஜயத்தை நிறைவு செய்த இந்தியத் துணை ஜனாதிபதி, இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

இந்திய துணை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததோடு, இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டார்.

இந்தியக் துணை ஜனாதிபதி கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததுடன், தனது இரண்டு நாள் விஜயத்தின் போது முக்கியமான பல கலந்துரையாடல்களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். இந்தியக் துணை ஜனாதிபதி, நேற்று (19) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கையில் வசிக்கும் இந்திய சமூகத்தினரைச் சந்தித்த இந்தியத் துணை ஜனாதிபதி, பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் மற்றும் ஹூணுபிட்டி கங்காராம விகாரை ஆகியவற்றிற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் இரண்டாம் நாளான இன்று, இந்தியக் துணை ஜனாதிபதி நுவரெலியா பகுதியில் இந்திய உதவியின் கீழ் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டங்களை பார்வையிட்டதுடன், அங்கு மலையக மக்களையும் சந்தித்தார்.

நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், இந்தியத் துணை ஜனாதிபதி, சி.பி.இராதாகிருஷ்ணன் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23