மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர் கைது!

20 Apr, 2026 | 05:50 PM
image

காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய விமானப்படை வீரர் ஒருவரை அநுராதபுரம் மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் பனாவெவ, சீப்புக்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலுக்க அமைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 33 வயதுடையவர், சீப்புக்குளம், பனாவெவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ்  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் நடத்தி வருவதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23