(இராஜதுரை ஹஷான்)
எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இன்று குழுவுக்கு முன்னிலையாகவிருந்த நிலையில் குழு கூட்டம் திகதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் அசமந்த போக்கியை வெளிப்படுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், விசேட செயற்குழுவின் பிரதிநிதியுமான மனோ கணேசன் கடும் அதிருத்தி வெளிப்படுத்தினார்.
மாகாணசபை தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்கும் பாராளுமன்ற விசேட செயற்குழு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும் பொருட்டு காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டது. பழைய விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குழுவில் வலியுறுத்தியுள்ளோம்.
கடந்த வாரம் குழு கூடிய போது மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு தீர்வு விடயங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவில் பிரசன்னமாகியிருந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதற்கமைய செவ்வாய்க்கிழமை (21) செயற்குழுவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்னிலையாகவிருந்த நிலையில் திகதி அறிவிக்காமல் குழு கூடல் பிற்போடப்பட்டுள்ளது.
இது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள அசமந்த போக்கினை வெளிப்படுத்துகிறது. செயற்குழுவின் நடவடிக்கைகளை மூன்று மாதத்துக்குள் நிறைவுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தாமதப்படுத்தாதல் குழுவின் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM