உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது ; குண்டுத்தாக்குதல் பற்றி இப்ராஹிமிடமே கேட்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

20 Apr, 2026 | 05:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசாங்கம் முழுமையாக அரசியல் மயப்படுத்தியுள்ளது. அரசியல் நோக்கத்துக்காவே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுத்தாக்குதல் பற்றி தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிமிடமே கேட்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் அந்தப் பொறுப்பை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவையோ ஏற்கவில்லை.

அமைச்சரவையின் தீர்மானத்தை அமுல்படுத்திய அரச அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களோ அல்லது பதவி நீக்கப்படுவார்களோ என்று தெரியவில்லை.

நிலக்கரி இறக்குதியின் போது மோசடி இடம்பெற்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் ஜனாதிபதி 2009ஆம் ஆண்டில் இருந்து இறக்குமதி செய்த நிலக்கரி பற்றி ஆராய்வதற்கு ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

கடந்த காலம் பற்றி ஆராய்வதாயின் ஜனாதிபதி 1988 மற்றும் 1989 ஆகிய காலப்பகுதிகளில் இறக்குமதி செய்த நிலக்கரி பற்றியும் ஆராய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகுகின்றன.இந்த சம்பவத்தை அரசாங்கம் முழுமையாக அரசியல்மயப்படுத்தியுள்ளது.

விசாரணைகள் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் நோக்கத்துக்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டுத்தாக்குதல் பற்றி புலனாய்வு தகவல் கிடைத்தும் அது குறித்து  எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் புலனாய்வுத் தகவலை மறைத்த இரண்டு அதிகாரிகள் தான் இன்று குண்டுத்தாக்குதல் பற்றிய விசாரணைகளை மேற்கொள்கிறார்கள். இவ்வாறான நிலையில் எவ்வாறு உண்மை வெளிவரும்.

குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட இரண்டு பிரதான தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினராவார். அவரது சொத்துக்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. ஆகவே குண்டுத்தாக்குதல்கள் பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35
news-image

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்:...

2026-05-11 16:18:22