நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம் முயற்சி - திலித் ஜெயவீர குற்றச்சாட்டு

20 Apr, 2026 | 04:40 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்கும் தந்திரோபாயத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகார கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

சித்திரை புத்தாண்டின் பின்னரான சர்வஜன அதிகார கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் திங்கட்கிழமை (20)  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. கட்சியின் தலைவர் திலித் ஜெயவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திலித் ஜெயவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்குவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அரசாங்கம் பயன்படுத்தும் ஒரு தெளிவான உபாயத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்தத் தந்திரோபாயத்தின் ஊடாக, பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான குமாரர்களைக் கழுவித் தூய்மைப்படுத்தி, தாரை தப்பட்டை முழங்க மீண்டும் இந்த மாளிகைக்குள் அழைத்து வர இந்த விசேட ஆணைக்குழு முயற்சிப்பதாகத் தெரிகிறது.

தற்போது சேவையில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு, நாட்டின் சட்டத்தின் ஆட்சியை பாரிய சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. எமது நாட்டின் புகழ்பெற்ற சட்ட வரலாற்றையும் நீதியின் ஆதிக்கத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இவர்கள் செயற்படுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், ஒரு சாதாரண மனிதன் பார்த்தாலே இங்கே பாரிய குற்றம் நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியும்.

குறிப்பாக, கணக்காய்வாளர் நாயகம் ஒவ்வொரு விடயமாகத் தெளிவுபடுத்தி ஆதாரங்களுடன் கருத்துக்களை முன்வைத்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில், அவர்களைப் பால் ஊற்றி நீராட்டிப் புனிதர்களாக்க முயற்சி செய்கிறார்கள். எனினும், அவர்கள் ஊற்றும் இந்தப் பால் ஒரு சாணக் குவியலுக்குள் ஊற்றப்படும் பாலாகவே அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52
news-image

மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான புதிய அரசியல்...

2026-09-14 15:45:54