இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள் ; மயிலாடு துறையில் போராடிய இளைஞனின் விடயத்தை சுட்டிக்காட்டி இந்திய துணை ஜனாதிபதிக்கு தமிழரசுக்கட்சி கடிதம்

20 Apr, 2026 | 04:39 PM
image

(ஆர்.ராம்)

இலங்கை திரும்ப விரும்பும் அனைத்து அகதிகளுக்கும் இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய துணை ஜனாதிபதி இராதா கிருஷ்ணனிடத்தில் எழுத்துமூலம் கோரியுள்ளது.

மயிலாடுதுறை ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக இந்தியாவில் 25வருடங்களாக வாழ்ந்து வரும் 37 வயதான இளைஞர் ஒருவர் தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கோரி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் வசித்து வரும் தான், உரிய ஆவணங்கள் மற்றும் உரிமைகள் இன்றி அநாதை போல வாழ்வதாகவும், தன் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பவதாகவும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை சுமார் 10 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால்இ விரக்தியில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்ததாகவும் குறிப்பிட்ட அவரை

மயிலாடுதுறை ஆட்சி அலுவலர் அலுவலகத்தைச் சூழ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அழைத்துச் சென்று மனுவை கைளிப்பதற்கு உதவியளித்தனர்.

இந்த விடயம் சம்பந்தமான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இலங்கைத் தமிழரசுக்கட்சி அவ்விடயம் சம்பந்தமாக கவனத்தில் கொண்டதோடு உடனடியாக இந்திய துணை ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

அந்தவகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஏம்.ஏ.சுமந்திரனால் ‘இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள்’ எனும் தலைப்பில்  அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எம்மோடு உரையாடுவதற்காக உங்களது பெறுமதிமிக்க நேரத்தை ஒதுக்கித் தந்தமைக்காக முதற்கண் நன்றி செலுத்துகின்றோம். இச்சந்திப்பில் இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் அகதிகளின் மீள் வருகை சம்பந்தமாக தாங்கள் சொன்ன ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நாம் நன்றி சொல்ல விரும்புகின்றோம்.

இக்கடிதத்தோடு இணைத்திருக்கும் காணொளிச் செய்தியில் அப்படியாகத் திரும்பி வரவிரும்பும் ஒரு இளைஞன் நேற்று செய்த போராட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பேசிக்கொண்டதற்கு இணங்க குறித்த இளைஞனது மீள்வருகைக்காக இந்திய அரசின் தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களை துரிதமாக நிறைவேற்றும்படி குறித்த நிர்வாகிகளைப் பணிக்குமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளையில் இவரைப் போல திரும்பிவர விரும்பும் அனைவருக்கும் உங்களது அரசு தரப்பிலே செய்யவேண்டியவற்றை துரிதப்படுத்துமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35