இலங்­கை­யா­னது முன்­னேற்­றத்தை வெளிக்­காட்­டி­யுள்­ள­போ­திலும் இன்னும் பல துறை­களில் மறு­சீ­ர­மைப்பை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக காணி­களை மீள­ளிக்­க­வேண்டும் என்­ப­துடன் காணா­மல்­போ­ன­வர்­களின் விவ­கா­ரத்தில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.

Image result for ஐரோப்­பிய ஒன்­றியம்

இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் மற்றும் 27 சர்­வ­தேச சாச­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­துதல் தொடர்­பாக மதிப்­பீடு செய்­வ­தற்கு இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுக்­கு­ழு­வினர் நேற்­றை­ய­தினம் தமது மதிப்­பீட்டை முடித்­துக்­கொண்­டனர். இது தொடர்பில் அறிக்­கை­வி­டுத்­துள்ள இலங்­கையில் உள்ள ஐரோப்­பிய ஒன்­றிய அலு­வ­லகம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.

அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

மனித உரி­மை­களை பாது­காக்கும் விட­யத்தில் இலங்கை முன்­னேற்­றத்தை வெளிக்­காட்­டி­யுள்­ளது. ஆனால் மேலும் பல்­வேறு துறை­களில் முன்­னேற்றம் வெளிக்­காப்­பட்­ட­ப­ட­வேண்­டி­யுள்­ளது. இலங்கை வந்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றியத் தூதுக்­குழு பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. அமைச்­சர்கள் சிவில் சமூ­கப்­ பி­ர­தி­நி­திகள், தொழிற்­சங்க பிர­தி­நி­திகள், சர்­வ­தேச அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்கள் என­ ப­ல­ரையும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தூ­துக்­குழு சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது.

அத்­துடன் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்த குழு வட­மா­காண முத­ல­மைச்­சரை சந்­தி­த்­த­துடன் சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­தி­க­ளையும் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டனும் இந்த தூதுக்­கு­ழு­வினர் பேச்சு நடத்­தினர். குறிப்­பாக சித்­தி­ர­வ­தைகள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட வேண்டும். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகள் மீள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் காணாமல்போனவர்களின் விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும்