(எம்.ஆர்.எம்.வசீம்)
மேதின கூட்டத்தை இணைந்து நடத்த ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (20) ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
மேதின நிகழ்வை இணைந்து மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை. என்றாலும்
சர்வதேச தொழிலாளர் தினம் எதிர்வரும் முதலாம் திகதி வெசாக் போயா தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் ரீதியிலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் எமது தேசிய சேவை சங்கத்துடன் இணைந்து மத வழிபாட்டை அடிப்படையாகக்கொண்டு மேதின நிகழ்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மேதின கூட்டத்தை நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் அன்று வெசாக் தினமும் இருப்பதால்தான் பிரச்சினை இருக்கிறது. இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நான் இருக்கிறேன். என்றாலும் எமது தனித்துவத்தையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் எப்படியாவது இரண்டு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செல்ல நானும் எமது ஏனைய தலைவர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதேநேரம் மக்கள் இந்தமுறை தமிழ் சிங்கள புத்தாண்டை மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே கொண்டாடியுள்ளார்கள். பொருட்களின் விலை அதிகரிப்பே அதற்கு காரணமாகும் நிலக்கரி மோசடி காரணமாகவே எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.
என்றாலும் தற்போது இந்த மோசடி குறித்து தேடிப்பார்க்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணைக்குழு நீதியான விசாரணை மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற புதுவருட பணி ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவில்லை. கட்சியின் பொதுச் செயலாளரான தலதா அத்துகோரளவின் தலைமையிலேயே நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM