மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12 அடி உயர சரஸ்வதி சிலை திறந்துவைப்பு

20 Apr, 2026 | 02:11 PM
image

(இணையத்தள மட்டக்களப்பு செய்தியாளர்) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 2017ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் கற்ற மாணவர்களின் அனுசரணையில் அமைக்கப்பட்ட 12 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலை திங்கட்கிழமை (20) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய பிரதி அதிபர் சு.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பிரணவரூபன் மற்றும் முன்னாள் அதிபர் அருள்ராசா, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயரமுடைய சரஸ்வதி சிலைக்கு பூர்வாங்க கிரியைகள் நடைபெற்றுத, அதிதிகளால் திரை நீக்கம் செய்யப்பட்டு, சிலை திறந்துவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். அராலி வடக்கு, இலந்தைதாழ்வு முருகமூர்த்தி...

2026-05-21 16:56:27
news-image

பிரம்ம கமலம் - 2026

2026-05-21 13:05:47
news-image

கனடாவின் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்

2026-05-21 12:58:21
news-image

சாயி பாபாவின் தாயாரான ஈஸ்வராம்பாள் அன்னை...

2026-05-21 06:35:58
news-image

பிறீமா கொத்துமீ 'Hot ‘N’ Spicy...

2026-05-21 05:18:47
news-image

பெண்கள் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்த கிழக்கில்...

2026-05-21 00:59:43
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2026-05-20 19:08:42
news-image

சர்வதேச தரத்தில் நடைபெற்ற எம்.டி.ஆர்.டி மாநாடு

2026-05-20 17:44:29
news-image

முஸ்லிம் சிங்கள மொழி நூல் வெளியீட்டு...

2026-05-20 17:11:28
news-image

யாழ். அராலி வடக்கு இலந்தைத்தாழ்வு முருகமூர்த்தி...

2026-05-20 14:10:22
news-image

கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு...

2026-05-20 13:51:24
news-image

கலை ஆர்வலர்களுக்கு அமைப்பாளர் நியமனம்

2026-05-19 19:01:06