போதை பொருள் பயன்படுத்தும் பெண்ணொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க பல்பொருள் அங்காடி ஒன்றினுள் புகுந்து அங்கிருந்த மரக்கறி வகைகள் வைக்கும் பகுதியிற்கு சென்று அத்தட்டினுள் புகுந்தமையால் அங்கு பரபரப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜோர்ஜியாவில் ஸ்டோன் மலை என்றழைக்கப்படும் நகரத்தில் அமைந்துள்ள கிரோகர் பல்பொருள் அங்காடியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதை பொருள் பயன்படுத்திய அப்பெண் பொலிஸிடமிருந்து தப்புவதற்காக பல்பொருள் அங்காடி ஒன்றினுள் புகுந்து அங்கிருந்த மரக்கறி வகைகளை வைக்கும் பகுதியிற்கு சென்று மரக்கறி தட்டினுள் பாய்ந்து ஒளிந்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

மேலும், போதையில் அங்கிருந்த மரக்கறி வகைகளை நாசமாக்கியதோடு, அதை தடுக்க சென்ற இருவரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.