(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
ரஷ்ய எண்ணெய் மீதான தடை நீக்கத்தை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி வரை நீட்டிப்பதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்கொட் பெசென்ட் அறிவித்ததற்கு, உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கப்பல்களில் ஏற்கெனவே ஏற்றப்பட்டுள்ள ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிபொருட்களை அடுத்த 30 நாட்களுக்கு வாங்குவதற்கு அனுமதித்து அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பானது, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலை மேலும் வலுப்படுத்துவதாக ஸெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (19) ஸெலன்ஸ்கி கூறுகையில், “ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும், உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கே ரஷ்யா பயன்படுத்துகிறது” என்றார்.
இந்நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் பெறுவதற்கான கால நீட்டிப்பு அறிவிக்கப்பட்டதற்கான காரணம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவே என்று அமெரிக்க தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 13ஆம் திகதி ரஷ்யா மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியதை ஸெலென்ஸ்கி மற்றும் அவரது ஐரோப்பிய நட்பு நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், "தேவைப்படுபவர்களுக்கு எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்வதற்காக" இந்தத் தளர்வு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இருப்பினும், தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யா பயன்படுத்துகின்ற, மொஸ்கோவின் நிழல் கடற்படையைச் சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கப்பல்கள் கடற்பரப்பில் உள்ளதாகவும் அவற்றில் 12 மில்லியன் தொன் எண்ணெய் இருப்பதாகவும், இதன் விற்பனை மூலம் ரஷ்யாவுக்கு 10 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டிய ஸெலென்ஸ்கி, இந்த பணம் நேரடியாக உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யாவால் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் மட்டும் ரஷ்யா சுமார் 2,360க்கு மேற்பட்ட ட்ரோன்கள், 1,320 வான்வழிக் குண்டுகள் மற்றும் 60 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 15ஆம் திகதி நடந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன, இதில் 18 பேர் உயிரிழந்தனர் என ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரைனும் ரஷ்யாவைத் தாக்கியிருந்தது. குறிப்பாக, ரஷ்யாவின் உள்நாட்டு எரிசக்தி கட்டமைப்புக்களில் தாக்குதல் நடத்தியிருந்தது. இருப்பினும், தற்போது உக்ரைன் போரில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, உக்ரைனின் சுமார் 20% பகுதியினை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில், ஈரானில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எடுத்து வந்த முயற்சிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM