(இணையத்தள செய்திப் பிரிவு)
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுவான் பகுதியை சேர்ந்த 48 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உறவினர்களுடன், நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை கீரிமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு கடலில் நீராடிய வேளை குறித்த நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து, அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM