எரிபொருள் விலை அடுத்த ஆண்டு வரை 03 டொலருக்கு மேல் நீடிக்கலாம் – அமெரிக்க வலுசக்தி செயலாளர் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

20 Apr, 2026 | 11:43 AM
image

(இணையத்தள சர்வதேச செய்திப்பிரிவு)

அமெரிக்காவில் பெற்றோல் விலை அதன் உச்சத்தை எட்டியிருக்கலாம் என்றாலும், அடுத்த ஆண்டு வரை ஒரு கேலன் விலை 03 டொலருக்கு மேல் நீடிக்கக்கூடும் என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் செய்தி சேவையின் “State of the Union” நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் விலைகள் விரைவில் குறைய ஆரம்பிக்கும் என்றாலும், அது உடனடியாக 03 டொலருக்கு கீழ் வீழ்ச்சி அடைய சாத்தியமில்லை என குறிப்பிட்டார்.

ஈரானை மையமாகக் கொண்ட பிராந்திய பதற்றங்கள் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்திற்கு அரசியல் சவாலாக மாறியுள்ளது.

அதேவேளை, அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெஸ்ஸன்ட், இந்த கோடைக்காலத்திலேயே பெற்றோல் விலை 03 டொலர்  அளவுக்கு குறையக்கூடும் என முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால், வலுசக்தி செயலாளர் அதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

AAA தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கேலன் பெற்றோலின்  சராசரி விலை 4.05 டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 3.16 டொலராக பதிவாகி  இருந்தது.

மேலும், மத்திய கிழக்கு பதற்றங்களின் தாக்கத்தால் ஜெட் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் இருப்பதாக விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த பிரச்சினை குறுகிய காலத்திற்குள் தீர்ந்து, பின்னர் பயணச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி  தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று அமெரிக்காவும் ஈரானும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஆனால், இந்த வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரான் இந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார். 

மேலும், தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை Pakistan செல்லவுள்ளதாகவும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

 "நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் ஏற்கத்தக்க ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், அவர்கள் அதை ஏற்காவிட்டால், அமெரிக்கா ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் தகர்த்துவிடும்," என போர் நிறுத்தத்திற்கு முன்பு தான் விடுத்திருந்த அச்சுறுத்தலை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10