(இணையத்தள செய்திப் பிரிவு)
நெலுவ – மொரவக்க வீதியின் லேல்வல, குருதியபத சந்தியில் இன்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், வீதியின் வலதுபுறமாக மோட்டார் சைக்கிள்கள் செலுத்தப்பட்டமையே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அக்குரஸ்ஸ, போரம்ப பகுதியைச் சேர்ந்த ஒருவரும், நெலுவ பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் இரு இளைஞர்களும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நெலுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடுகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM