புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை 1.5 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்!

Published By: Digital Desk 1

20 Apr, 2026 | 10:46 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பயணிகள் தமது போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகும்புற பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தின் முகாமைத்துவ உதவியாளர் நிமல் வெத்தசிங்க இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று 19ஆம் திகதி வரை இந்த எண்ணிக்கையிலான பயணிகள் இந்த போக்குவரத்து மையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். பயணிகளின் வசதிக்காக 2,600-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை என்பன இணைந்து இந்தப் பஸ் சேவைகளை ஒருங்கிணைத்திருந்தன. பயணிகளின் நெரிசலைக் கருத்திற் கொண்டு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக விசேட கால அட்டவணையின் கீழ் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், நாளை செவ்வாய்க்கிழமை (21) முதல் மீண்டும் வழமையான கால அட்டவணையின் படி பஸ்கள் இயங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23