03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது!

Published By: Digital Desk 1

20 Apr, 2026 | 09:38 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சட்டவிரோதமான முறையில் சுமார் 03 கோடி ரூபாய் பெறுமதியுடைய சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை கொண்டுவந்த சீனப் பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய இவர் இலங்கைக்கு வருகை தரும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் இவர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் Green Channel ஊடாக வெளியேற முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரது 13 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229,800  சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் (1,149 கார்ட்டூன்கள்) கைப்பற்றப்பட்டன. அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 03 கோடியே 44 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35
news-image

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்:...

2026-05-11 16:18:22