ஈரான் துறைமுகத்தை நோக்கிச் சென்ற சரக்கு கப்பல் அமெரிக்க கட்டுப்பாட்டில் !

20 Apr, 2026 | 09:24 AM
image

(இணையத்தள சர்வதேச செய்திப்பிரிவு)

மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பதற்ற நிலை தொடர்ந்தும் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தற்காலிக போர்நிறுத்தம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க அமெரிக்க குழு புறப்படும் என முன்னதாகவே டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஈரான் தரப்பு இதில் பங்கேற்குமா என்பது இன்னும் உறுதியளிக்கப்படவில்லை.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் மீண்டும் ஹோர்மூஸ் நீரிணையை மூடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கும், சர்வதேச வர்த்தகத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஈரானைச் சேர்ந்த “Touska” (டூஸ்கா) என்ற சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலின்படி, சுமார் 900 அடி நீளமுடைய இந்தக் கப்பல், அமெரிக்க கடற்படை முற்றுகையை மீறி செல்ல முயன்றது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், கப்பல் குழுவினர் அதனை பின்பற்றாததால், கப்பலின் இயந்திர அறையில் தாக்குதல் நடத்தி அதை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கப்பல் முன்பே சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கருதி அமெரிக்க நிதித்துறை விதித்த தடைகளின் கீழ் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கப் படைகள் வெளியிட்ட தகவலின்படி, அரேபியன் கடல் பகுதியில் நடைமுறையில் உள்ள கடற்படை முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

USS Spruance (DDG-111) எனும் ஏவுகணை அழிப்பு கப்பல், வடக்கு அரேபியக் கடலில் Bandar Abbas Port நோக்கி சென்ற “M/V Touska” கப்பலை தடுத்து நிறுத்தியுள்ளது.

சுமார் 17 கடல் மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த கப்பலை பலமுறை எச்சரித்தபோதும், அது நிறுத்தப்படாததால், இறுதியில் கப்பலின் இயந்திர அமைப்பை செயலிழக்கச் செய்யும் வகையில் 5 அங்குல MK 45 கடற்படை துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 31st Marine Expeditionary Unit ஐ சேர்ந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் கப்பலில் ஏறி அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது அந்தக் கப்பல் முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், ஏற்கனவே தீவிரமடைந்துள்ள மேற்காசியகு பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது. கடற்படை முற்றுகை ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 25 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்பு

2026-05-09 20:13:55
news-image

தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க...

2026-05-09 19:49:54
news-image

ஆளுநரை சந்திக்காமல் இடைநடுவிலேயே திரும்பினார் விஜய்

2026-05-09 18:24:17
news-image

தமிழக ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் த.வெ.க...

2026-05-09 18:16:29
news-image

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று...

2026-05-09 17:48:21
news-image

த.வெ.கவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

2026-05-09 17:55:09
news-image

த.வெ.க-வின் பலம் 118 ஆக உயர்வு:...

2026-05-09 20:59:16
news-image

“வெற்றி வெற்றி வெற்றி... ; விஜய்...

2026-05-09 17:12:08
news-image

தமிழக அரசியலின் பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர்...

2026-05-09 21:01:12
news-image

விஜய்யைச் சந்திக்கத் துணியும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?...

2026-05-09 20:33:20
news-image

திருமாவளவன் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு? -...

2026-05-09 16:30:17
news-image

த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவளிப்பாரா திருமாவளவன்?...

2026-05-09 14:07:54