அநுராதபுரம் – கவரக்குளம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி மாலை பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கவரக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லவெவ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், ஹல்மில்லவெவ – குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க தலைமையில் கவரக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM