மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை: இருவர் கைது!

Published By: Digital Desk 1

20 Apr, 2026 | 08:44 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலுக்கமைய, ஞாயிற்றுக்கிழமை (19) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 02 கிலோகிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 112 கிராம் ஹெரோயின், 08 கிராம் கொக்கெய்ன் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரும், அதற்கு உதவிய ஒருவருமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்; 31 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் பன்னிபிட்டிய மற்றும் ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35