( இணையத்தள செய்திப் பிரிவு )
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சுமார் 06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளை கொண்டுவந்த இரண்டு வெளிநாட்டு சமூக ஊடகவியலாளர்கள் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இந்தோனேசியப் பிரஜைகள் என்பதுடன், அவர்கள் அந்நாட்டின் சமூக ஊடகவியலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
22 வயதுடைய ஆண் சமூக ஊடகவியலாளர் ஒருவரும், 30 வயதுடைய பெண் சமூக ஊடகவியலாளர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பேங்காக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து இந்தியாவின் பெங்களூரு நகருக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து இண்டிகோ (6E-1183) விமானம் மூலம் இன்று அதிகாலை 12.53 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளுக்குள் 05 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 06 கிலோகிராம் 401 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 06 கோடியே 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து, இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM