சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம் : ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து கொழும்பில் கூட்டம்

Published By: Vishnu

20 Apr, 2026 | 05:43 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறேம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தொழிலார்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை ஏமாற்றி இருக்கிறது. அதனால் எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தை அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.

கொழும்பில் நடத்த இருக்கும் இந்த மே தின கூட்டத்துக்கு ஐக்கிய  தேசிய கட்சிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்க இருக்கிறோம். இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து மே தின கூட்டத்தை நடத்துவதற்கே திட்டமிட்டிருக்கிறோம். அதனால் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து நடத்தும் முதலாவது மே தின கூட்டம் எதிர்வரும் மே முதலாம் திகதி இடம்பெறும் என நம்புகிறேன்.

அத்துடன் பொதுஜன பெரமுன மே தினத்தை கொண்டாடுவதில்லை என தெரிவித்திருக்கிறது. மே தினத்தை கொண்டாட முடியாத  அந்த கட்சி, ஒருபோதும் அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கப்போவதில்லை. அதேநேரம் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பொதுஜன பெரமுனவை நிராகரித்து, பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை தெரிவு செய்திருக்கிறார்கள். அதனால் எடுத்த ஆட்சி அமைக்கப்போவது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23