லக்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார சபை  ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் தமது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.

லக்கஷபான மின்சாரசபைக்குட்பட்ட கெனீயன். மவுசாகலை, விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ மின்சார சபை ஊழியர்கள் 450 பேர் மேற்படி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நுகர்வோர், பட்டியல்,  திருத்தம் உள்ளிட்ட மூன்று  அம்ச கோரிக்கையை முன்வைத்து மின்சார சபை சங்கத்தினரால் நண்பகல் முதல்  48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது 

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்ஷபான மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதேவேளை, ஹட்டன்  மின்சார சேவை நிலைய ஊழியர்கள் ஒருசிலரும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.