தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே அவசியம்

19 Apr, 2026 | 12:15 PM
image

நிலக்­கரி இறக்­கு­மதி தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்று கோரி அர­சாங்கத் தரப்பும் எதிர்த்­த­ரப்பும் ஏட்­டிக்குப் போட்­டி­யாக முறைப்­பா­டு­களை செய்து வரு­கின்­றன.

கடந்த 11ஆம் திகதி   ஜனா­தி­ப­தியின் செய­லாளர் கலா­நிதி நந்­திக சனத் குமா­நா­யக்க, குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­துக்குச் சென்று 2009ஆம் ஆண்டு முதல் இலங்­கைக்கு நிலக்­கரி இறக்­கு­மதி செய்த முறைமை தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு முறைப்­பாடு பதிவு செய்­தி­ருந்தார்.

இதே­போன்றே கடந்த 13ஆம் திகதி ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­துக்குச் சென்று, நிலக்­கரி மோசடி தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறு முறைப்­பாட்டை செய்­தி­ருக்­கின்றார்.

இதில், ‘ஜனா­தி­ப­திக்கு நெருக்­க­மான தொழி­ல­தி­பர்­களை பாது­காப்­ப­தற்­காக நிலக்­கரி கேள்­விப்­பத்­திர நடை­மு­றை­களில் சட்­ட ­வி­ரோத தலை­யீ­டுகள் இடம்­பெற்­றுள்­ளன. சமூக வலை­த­ளங்­களில் கசிந்­துள்ள ஒளிப்­ப­தி­வுகள் மற்றும் கணக்­காய்­வாளர் அறிக்­கையின் அடிப்­ப­டையில் இந்த மோச­டியை விசா­ரிக்க வேண்டும்’ என முஜிபுர் ரஹ்மான், குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் முறைப்­பா­ட­ளித்­துள்ளார்.

நிலக்­கரி இறக்­கு­ம­தியில் ஊழல் மோசடி இடம்­பெற்­றுள்­ள­தாக குற்­றச்­சாட்டி வலு­சக்தி அமைச்சர் குமார ஜயக்­கொ­டிக்கு எதி­ராக ஐக்­கிய மக்கள் சக்­தி­யி­னரால் பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரேணை கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. அந்தப் பிரே­ரணை மீதான விவாதம் கடந்த 10ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது நிலக்­கரி இறக்­கு­மதி தொடர்பில் கணக்­காய்­வாளர் நாய­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­பட்­டது. அந்த அறிக்­கையில் நிலக்­கரி இறக்­கு­ம­தியில் மோசடி இடம்­பெற்­றுள்­ளமை நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது பிரே­ர­ணைக்கு எதி­ராக 153 பேரும், ஆத­ர­வாக 49 பேரும் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. இந்த நிலையில் 104 மேல­திக வாக்­கு­க­ளினால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்தப் பிரே­ரணை மீதான விவா­தத்தின் போது, நிலக்­கரி இறக்­கு­ம­தியில் பெரும் மோசடி இடம்­பெற்­றி­ருந்­த­தாக எதி­ர­ணி­யினர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்­தனர்.

அன்­றைய தினம் நிலக்­கரி மோச­டிக்கு எதி­ரா­கவும் வலு­சக்தி அமைச்சர் குமார ஜயக்­கொ­டியை பதவி விலக்க வேண்டும் என்று கோரியும் ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற சுற்­று­வட்­டா­ரத்தில் பெரும் ஆர்ப்­பாட்டம் ஒன்­றையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

தர­மற்ற நிலக்­கரி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டதன் மூலம் நாட்­டுக்கு பில்­லியன் கணக்­கான ரூபா நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இந்த ஊழலை மறைக்க அர­சாங்கம் மின்­சாரக் கட்­ட­ணத்தை உயர்த்த முயற்­சிப்­ப­தா­கவும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட ஐக்­கிய மக்கள் சக்­தி­யினர் கடும் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்­தனர்.

இங்கு கருத்து தெரி­வித்த எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, “அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள ஊழல் நிறைந்த நிலக்­கரி விநி­யோக நடை­மு­றைக்கு எதி­ரா­கவும் தரம் குறைந்த நிலக்­கரி இறக்­கு­ம­தியால் ஏற்­பட்­டுள்ள பாரிய நட்­டத்­துக்கு எதி­ரா­கவும் நாம் போரா­டு­கின்றோம். இந்த மோச­டி­யினால் 32 பில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மான நஷ்டம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. மின்­சாரக் கட்­ட­ணத்தை அதி­க­ரித்து இந்த நட்­டத்தை மக்­களின் தலையில் சுமத்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றது.

நிலக்­கரி மோசடி குறித்து கணக்­காய்­வாளர் நாய­கத்தின் அறிக்கை மிகத் தெளி­வாக குறிப்­பி­டு­கின்­றது.

இதில் நடை­பெற்ற ஊழலை அந்த அறிக்கை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது” என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீது உரை­யாற்­றிய ஐக்­கிய மக்கள் சக்தி மற்றும் எதி­ரணி உறுப்­பி­னர்கள் நிலக்­கரி இறக்­கு­ம­தியில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளையும் சுமத்­தி­யி­ருந்­தனர்.

இங்கு கருத்து தெரி­வித்­தி­ருந்த பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய, உட்­பட அர­சாங்க அமைச்­சர்கள் நிலக்­கரி இறக்­கு­மதி தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்று உறுதி வழங்­கி­யி­ருந்­தனர்.

தர­மற்ற நிலக்­கரி இறக்­கு­மதி கொள்­வ­னவு குறித்து விசேட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு நிய­மிக்­கப்­படும் என்றும் தற்­போது சேவையில் உள்ள நீதி­ய­ர­சர்கள் தலை­மையில் இந்த ஆணைக்­குழு செயற்­படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க சபையில் தெரி­வித்­தி­ருந்தார்.

2009ஆம் ஆண்டு முதல் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட நிலக்­கரி தொடர்பில் இந்த ஆணைக்­குழு விசா­ரணை நடத்தும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதே­போன்றே, “வலு­சக்தி அமைச்சர் ஊழல் செய்யும் நோக்கில் நிலக்­கரி இறக்­கு­மதி விட­யத்தில் செயற்­பட்டார் என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.  ஊழல் நோக்­கத்தில் இறக்­கு­மதி நடந்­த­தது என்­ப­தற்­கான ஆத­ராங்­களை வெளிப்­ப­டுத்­தினால் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என்று இங்கு உரை­யாற்­றிய பிர­தமர் ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலை­யில்தான் தற்­போது நிலக்­கரி இறக்­கு­மதி தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை நடத்­து­மாறு ஆளும் தரப்பும் எதிர்த்­த­ரப்பும் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் முறைப்­பா­டு­களை செய்­தி­ருக்­கின்­றன.

நாட்டில் நிலக்­கரி இறக்­கு­ம­தியின் போது மோசடி இடம்­பெற்­றுள்­ளமை தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. தர­மற்ற நிலக்­கரி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டி­ருப்­பதை அர­சாங்­கமும் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க உட்­பட ஆளுந்­த­ரப்­பினர் இதனை ஏற்றுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

ஆனால், இந்த இறக்­கு­ம­தியில் வலு­சக்தி அமைச்சர் தவ­றி­ழைக்­க­வில்லை என்­பதே ஆளுந்­த­ரப்­பி­னரின் நிலைப்­பா­டா­க  இருந்தது ஆனால், இந்த தர­மற்ற நிலக்­கரி இறக்­கு­மதி விட­யத்தில் வலு­சக்தி அமைச்­ச­ருக்கு பங்­குண்டு என்றும் அர­சாங்­கமே இதற்கு பொறுப்­பேற்க வேண்டும் என்றும் எதி­ரணி கூறி வரு­கின்­றது.

மொத்­தத்தில் நிலக்­கரி இறக்­கு­ம­தியில் மோசடி இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. தர­மற்ற நிலக்­கரி நாட்­டுக்கு பல கப்­பல்­களில் கொண்­டு ­வ­ரப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த விட­யத்தில் யார் தவ­றி­ழைத்­தது என்­பது தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்.

தற்­போது தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்சி பீடத்தில் உள்ள நிலை­யில்தான் கடந்த ஒரு வருட காலத்­துக்குள் இந்த இறக்­கு­மதி இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. அது குறித்து விசா­ரணை நடத்­து­மாறு எதி­ரணி கோரி  வரு­கின்­றது. இதற்­கா­கவே வலு­சக்தி அமைச்சர் குமார ஜயக்­கொ­டிக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையும் எதி­ர­ணி­யி­னரால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

வலு­சக்தி அமைச்சர் குமார ஜயக்­கொ­டிக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினால் மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு காலப் பகு­தியில் உரக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலை­வ­ராக செயற்­பட்ட போது உர இறக்­கு­ம­தியில் ஊழல் மோசடி இடம்­பெற்­ற­தாக குற்றம் சுமத்­தியே இந்த வழக்கு மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் அமைச்­ச­ருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரமும் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வாறு ஊழல் மோசடி குற்­றச்­சாட்டில் அமைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்டுப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவரை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்டும் என்று எதிர்த்­த­ரப்­பி­லி­ருந்து கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், அதற்­கான நட­வ­டிக்­கை­யினை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்லை. அவர் அமைச்­ச­ராக இருந்த போது குறித்த சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக இருக்­கின்­றது.

இந்த நிலையில் தான் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோரும் பதவி விலகியுள்ளனர் நிலக்கரி இறக்குமதி தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆணைக்குழு 2009ஆம் ஆண்டு முதல் இடம் பெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது

தற்போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரிக்காது பழைய விடயங்களை கிளறும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது

தேசிய மக்கள் சத்தி அரசாங்க காலத்தில்  இடம் பெற்ற மோசடி தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.தற்போது நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றமையும்  தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்ைகயில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது எனவே அது குறித்து உடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .அதன் பின்னர் கடந்த கால சம்பவங்களை விசாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41
news-image

தற்போதைய மோசடி தொடர்பில் உடனடி விசாரணையே...

2026-04-19 12:15:35
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துங்கள்

2026-04-11 18:26:09
news-image

தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது இணக்­கப்­பாடு...

2026-04-05 10:38:09
news-image

மத்திய கிழக்கு மோதல் விவகாரத்தில் நடுநிலைமை...

2026-03-29 11:34:39
news-image

எரி­சக்தி நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்கு தேசிய...

2026-03-22 15:06:40
news-image

உலகளாவிய நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டும்

2026-03-15 13:55:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம்...

2026-03-08 12:09:56
news-image

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் அக்­க­றை­யற்­றி­ருக்கும் அர­சாங்கம்

2026-03-01 12:37:43
news-image

இன ஒற்றுமைக்கான செயற்பாட்டுடன் தமிழர் பிரச்சினைக்கு...

2026-02-23 11:17:39
news-image

தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­வது அவ­சியம்

2026-02-15 16:24:39