நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யபட்டிருந்த இரு முறைப்பாடுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு விசாரணை இன்று ஈவா வனசுந்தர மற்றும் மலல்லேகொட ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த இரு முறைப்பாடுகளும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.