இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று இலங்கை வருகை

19 Apr, 2026 | 06:44 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan ) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (19 ) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கைக்கு முதன்முறையாக வருகை தரும் அவருக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொழும்பில் அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தவுள்ளார். இச்சந்திப்புகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, வட மற்றும் கிழக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடன் ஒருங்கிணைந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களுடனும் அவர் சந்திப்பு நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்புகளுக்குப் பிறகு,  கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கதிரேசன் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கவுள்ள அவர், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் சம்பிரதாயபூர்வ இராப்போசன விருந்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, விஜயத்தின் இரண்டாம் நாளான நாளை (20), மலையகப் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், சீதை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47