வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிரான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 190-வது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55-வது நாடாக இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆவணங்கள் கடந்த 16-ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த ஆவணத்தை ILO அமைப்பின் பொதுச்செயலாளர் கில்பர்ட் எப். ஹுங்போவிடம் கையளித்தார்.
இந்த உடன்படிக்கையை அங்கீகரித்ததன் மூலம், தொழிலாளர் சமூகத்தின் கௌரவம், சமத்துவம் மற்றும் மதிப்பை பாதுகாப்பதில் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக ILO பொதுச்செயலாளர் தெரிவித்தார். வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற ஒரு வேலைச் சூழலை உருவாக்குவதற்கு இலங்கை எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த உடன்படிக்கைக்கு அமைய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு இலங்கை அரசுக்கு ILO அமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சுமித் திஸாநாயக்க, வன்முறையற்ற வேலைச் சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு நபருக்கும் உள்ள உரிமையை மதிப்பதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக உள்நாட்டு சட்ட விதிகளை அறிமுகப்படுத்தவும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை திருத்தவும் இலங்கை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவினால் இந்த ஆவணங்கள் இலங்கையிலுள்ள ILO பிரதிநிதி ஜோனி சிம்ப்சனிடம் வழங்கப்பட்டன.
இந்த உடன்படிக்கையை அங்கீகரித்த தெற்காசியாவின் இரண்டாவது நாடாக இலங்கை திகழ்கிறது.
வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், அதனை எதிர்கொள்ளவும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் சட்டபூர்வ ஆவணம் இதுவாகும். குறிப்பாக, பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதும் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM