ஆணமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாகந்த, லணுவாவ குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பரமாகந்தகம, ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த வேட்டைத் துப்பாக்கியை வைத்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு ஆணமடுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி, சந்தேகநபர் வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஆணமடுவ பொலிஸார் ஈடபட்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM