சியான் 63' படத்திற்காக மீண்டும் இணையும் 'இரு முகன்' கூட்டணி

18 Apr, 2026 | 04:19 PM
image

தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் இந்திய நட்சத்திர நடிகராக அடையாளப்படுத்தப்படும் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை... ஒரு தசாப்தத்திற்கு பிறகு இருமுகன் படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'சியான் 63 'திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் வழங்குகிறார்.

'சியான் 63 'எனும் பெயரில் தயாராகும் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ காணொளி விக்ரமின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதனால் இதனை இணையத்தில் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் 'வீர தீர சூரன் பார்ட் 2' எனும் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளியானது என்பதும் இதனைத் தொடர்ந்து 'சியான் 63 ', 'சியான் 64', :சியான் 65' என மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது என்பதும் இப்படத்தின் பணிகள் எதுவும் தொடர்ந்து நடைபெறாததால் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் - ஆனந்த் ஷங்கர்- சியான் விக்ரம் - கூட்டணியில் சியான் 63 படத்தின் பணிகள் தொடங்ப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18