இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை (19) மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை (20) ஆகிய இரு தினங்களிலும் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் துணை ஜனாதிபதி நாளை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் கூடிய வாகனப் பேரணியில் காலி முகத்திடலில் அமைந்துள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார்.
இதன் காரணமாக, அவர் பயணிக்கும் காலப்பகுதியில் அந்தப் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லவுள்ளதால், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாளை மறுதினம் திங்கட்கிழமை (20) அவர் பயணிக்கும் வீதிகளை அண்டிய பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலைக் கருத்திற்கொண்டு, இந்த நாட்களில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM