சாதனை படைத்து வரும் நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 'சுயம்பு' படத்தின் முதல் பாடல்

18 Apr, 2026 | 04:03 PM
image

பான் இந்திய நட்சத்திரமாக புதிய உயரத்தைத் தொட்டிருக்கும் தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சுயம்பு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வா வா  தீ வரா' எனும் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.‌

இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி உள்ள 'சுயம்பு ' திரைப்படத்தில் நிகில் சித்தார்த்தா , சம்யுக்தா , நபா நடாஷ்,  சுனில்,  சுப்பா ராஜு , சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிக்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புவன் - ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தாகூர் மது வழங்குகிறார்.

எதிர்வரும் மே மாதத்தில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்ற 'வா வா தீ வரா வா வா ஆதிரா வஜ் ரம் நீயடா..' என தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் பரத் கிருஷ்ணமாச்சாரி எழுத பின்னணி பாடகர் சந்தோஷ் வெங்கி பாடியிருக்கிறார். சுய முன்னேற்றத்தையும்... வீரத்தையும்... தன்னம்பிக்கையும்... முன்வைத்து துள்ளலான மற்றும் அதிரடியான இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18