கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட ராணவ் நடிக்கும் 'பிரேக்ஃபாஸ்ட்' படத்தின் முன்னோட்டம்

18 Apr, 2026 | 03:58 PM
image

'பிக் பொஸ்' பிரபலம் நடிகர் ராணவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பிரேக் ஃபாஸ்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கு பற்றி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இயக்குநர் ஏ ஆர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிரேக் ஃபாஸ்ட்' திரைப்படத்தில் ராணவ்,  ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம் வி பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்கள் பரத் , ரியோ, மைம் கோபி, இயக்குநர் வசந்த பாலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், '' ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும்... ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும்... பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும்... இருக்கவே செய்யும்.

ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம். ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும், ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும். இந்த புரிதல் மிகப்பெரிய சங்கிலி.

இது எளிதில் அறுந்து விடாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதைத்தான் இந்த படத்தில் இயக்குநர் சொல்லி இருக்கிறார் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18