சமூகவலைத்தளங்களில் முன்னணியாக திகழும் பேஸ்புக்  தங்களின் வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக்கொள்ள அடிக்கடி புத்தம் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதன்படி, தற்போது ஐ-போன் எக்ஸ் (ஐ-போன்10) வெளியீட்டினை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் தனது கையடக்கத்தொலைபேசி செயலியின் ஊடாக 360 பாகையில் புகைப்படம் எடுக்கும் வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

குறித்த வசதியானது ஐ-போன் செயலிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் அன்ரோயிட் செயலிகளுக்கும் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் 360 பாகை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக் நிறுவனம் தற்போது தமது செயலி மூலமே புகைப்படங்களை எடுக்கும் வசதியினை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.