(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகளின் உதவி குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாகவும், விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறக்காமல் வைத்திருந்த நிலையில், லெபனான் – இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கடல் வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணை பிரச்சினை ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. இந்நிலையில், எங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா என்று நேட்டோ தரப்பிலிருந்து அழைப்பு வந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்கள் உதவி தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை என்று தெரிவித்தேன். எங்களுக்கு உதவி தேவைப்பட்ட நேரத்தில் அவர்கள் பயனற்றவர்களாக இருந்தனர்,” என்றார்.
மேலும், “உண்மையில் அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை. நேட்டோவுக்குத்தான் அமெரிக்கா தேவைப்படுகிறது,” எனவும் அவர் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM