ஹிஸ்புல்லாவுடனான மோதல் இன்னும் முடிவடையவில்லை – நெதன்யாகு உறுதி

18 Apr, 2026 | 10:36 AM
image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )

இஸ்ரேல் – லெபனான் இடையிலான பதற்றம் தொடர்பாக புதிய பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இரு நாடுகளுக்குமிடையே 10 நாள் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பதிலளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எனது நண்பர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில், லெபனானில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை,” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ரொக்கெட் கையிருப்புகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டதாகவும், இருப்பினும் அந்த அமைப்பை முழுமையாக செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை வெளியாகும் முன்பாக, டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், “இனி போதும்” என்று தெரிவித்து, லெபனான் மீது மேலதிக தாக்குதல்களை மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நெதன்யாகுவின் இந்த கருத்து, போர்நிறுத்தம் நிலைநிறுத்தப்படுமா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40
news-image

கொள்கைக்கு எதிரான விடயங்களை அரசு நிச்சயம்...

2026-08-15 10:38:21
news-image

சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் இந்தியாவின்...

2026-08-15 11:21:07
news-image

ஏழை, நடுத்தர மக்களையும் இணைத்தே நாட்டின்...

2026-08-15 10:12:59
news-image

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா...

2026-08-15 09:54:57
news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43