ராகமவில் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

18 Apr, 2026 | 10:40 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி, அவருக்குக் சித்திரவதை  செய்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகம பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 27 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்த பெண் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த  இராஜாங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20, 21, 22 , 23 வயதுகளையுடைய  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (18) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ராகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள்...

2026-05-21 17:10:22
news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 17:07:41
news-image

சமீரா மஹ்பூப்தீனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம்...

2026-05-21 17:05:22
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 17:18:16
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23