( இணையத்தள கிளிநொச்சி செய்தியாளர் )
டித்வா அனர்த்தம் காரணமாக இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பூநகரி பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களது பிரதேசத்தில் அனர்த்தம் காரணமாக இறந்த கால்நடைகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டது தொடக்கம் நட்டஈட்டு தொகை வழங்குதல் வரை முறையாக இடம்பெறவில்லை எனவும் இதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது எனவும் பூநகரி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு பூநகரி பிரதேச செயலக அலுவலகத்திலும், பூநகரி பிரதேச கால்நடை திணைக்கள அலுவலகத்திலும் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள பெயர்களும், பின்னர் நட்டஈடு வழங்கப்பட்ட பெயர்களிலும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
கால்நடைகள் வளர்க்காதவர்கள் மற்றும் அதிக கால்நடைகள் இறந்தவர்களுக்கு குறைந்த நட்டஈடும், குறைவான கால்நடைகள் இறந்த பயனாளிகளுக்கு அதிக நட்டஈடும் வழங்கப்பட்டுள்ளது எனவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கால்நடைகள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அலுவலத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, டித்வா புயலால் இறந்த கால்நடைகளுக்கான நட்டஈடு வழங்கும் செயற்பாட்டில் முறைகேடுகள் நடக்கவில்லை.
பயனாளிகளுக்கு இறந்த அனைத்து கால்நடைகளுக்குமான இழப்பீடு வழங்க்கப்படவில்லை. அந்தளவுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கிடைக்கப்பெற்ற நிதியினை பயனாளிகளின் இழப்பீட்டுக்கு ஏற்பவே வழங்கப்பட்டுள்ளது என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM