பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், குறித்த விடயத்தில் சாட்சியமளிக்க வேண்டுமென்பதுடன் அவர் சாட்சியமளிக்க விரும்பவில்லையாயின் அவரை வற்புறுத்த முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் இன்று முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.