துல்கர் சல்மான் நடிக்கும் ' ஐ அம் கேம் ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

17 Apr, 2026 | 05:35 PM
image

மலையாளத் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நடிகருமான துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஐ அம் கேம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஐ அம் கேம் 'திரைப்படத்தில் துல்கர் சல்மான்,  அண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர் ,பார்த் திவாரி , சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளது என்றும் , படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி... படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில், 'ஐ அம் கேம்' தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18