ரூம் பாய் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஏ சி எம் சினிமாஸ்
நடிகர்கள் : நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், 'காத்து கருப்பு' கலை, கற்பகம், கவிதா விஜயன் மற்றும் பலர்.
இயக்கம் : ஜெகன் ராயன்
மதிப்பீடு : 2/5
புதுமுக நடிகர்களின் படைப்புகள் என்றாலும் இயக்குநர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் முறையாக பயின்ற பட்டதாரி என்பதால்.. சிறிய நம்பிக்கையுடன் 'ரூம் பாய்' படத்தை காண்பதற்கு பட மாளிகைக்கு ரசிகர்கள் சென்றனர். அவர்களுக்கு இந்த படம் அவர்களின் நம்பிக்கையை தகர்த்து எரிச்சலை ஏற்படுத்தியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை உதவியாளராக ( ரூம் பாயாக) வேலைக்கு சேர்க்கிறார் சஞ்சய் ( நிகில்) . அந்த விடுதியில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் ஜேம்ஸ் என்பவரின் தலைமையில் பல சட்டவிரோத காரியங்கள் அங்கு நடைபெறுகிறது. இதனை தெரிந்து கொள்ளும் சஞ்சய் ஆதாரங்களை கைப்பற்றிய பிறகு ஜேம்ஸை கொடூரமாக கொலை செய்கிறார் சஞ்சய்.
அதே தருணத்தில் சஞ்சய் வேலைக்கு சேர்வதற்கு முன் இருந்த கூர்நோக்கு மையத்தின் காப்பாளரான இன்பதுரை( பிரபாகர் ) காணாமல் போகிறார். இது தொடர்பாக அவரது மகள் பவித்ரா காவல்துறையில் தனது தந்தை காணவில்லை என புகார் தெரிவிக்கிறார். அந்தப் புகாரை காவல்துறை விசாரிக்க தொடங்குகிறது.
சொகுசு விடுதியை சார்ந்த ஜேம்ஸ் கொலை தொடர்பாக நிர்வாகம் சார்பில் அதன் உரிமையாளர் ஒரு கும்பலை நியமித்து சஞ்சயை தேடுகிறார். அதே தருணத்தில் கூர்நோக்கு மைய காப்பாளர் இன்பதுரை மாயமான விடயத்திலும் காவல்துறையினர் சஞ்சையை தேடுகிறார்கள்.
உண்மையில் சஞ்சய் யார்? அவர் ஏன் கொலை செய்கிறார்? அதன் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை.
வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதை. இதை முடிந்த அளவிற்கு சுவராசியமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களுக்கு எந்த விடயமும் புதிதாகவோ ரசிக்கும் வகையிலோ இல்லை.
சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் நிகில் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் சில இடங்களில் மட்டுமே குறிப்பாக எக்சன் காட்சிகளில் மட்டுமே தேறுகிறார்.
சஞ்சயின் காதலி நிஷாவாக நடித்திருக்கும் நடிகையை விட ..பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஹர்ஷாவின் நடிப்பு சிறப்பு.
கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் இன்ப துரை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பிரபாகரின் வில்லத்தனமான நடிப்பு கவனிக்க வைக்கிறது.
இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ் போன்ற தெரிந்த முகங்கள் இருந்தாலும் சுவாரசியம் மிஸ்ஸிங்.
பாரதி ராஜனின் ஒளிப்பதிவும், வேலன் சகா தேவனின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. அப்பாவின் பெருமிதத்தை விவரிக்கும் பாடல் கேட்கும் ரகம்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் குடும்பம் தொடர்பான சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெறுகிறது. கிரைம் திரில்லர் ஜேனரிலான படைப்பாக இருந்தாலும் பட மாளிகையில் எந்த ஒரு ட்விஸ்ட்டும் ரசிகர்களுக்கு வியப்பளிக்கவில்லை.
ரூம் பாய் - AI ஜிம் பாய்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM