மிஸ்டர் எக்ஸ் - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ்
நடிகர்கள் : ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், ஆர் .சரத்குமார், மஞ்சு வாரியர், காளி வெங்கட், அனகா, ரைசா வில்சன், அதுல்யா ரவி, ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி மற்றும் பலர்
இயக்கம் : மனு ஆனந்த்
மதிப்பீடு : 2.5 /5
பட வெளியீட்டுக்கு முன் இது ஸ்பை த்ரில்லர் ஜேனரிலான படம் என்றாலும்... அண்மையில் இந்தி மொழியில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்ற 'துரந்தர்' படத்துடன் ஒப்பிட வேண்டாம் என படக் குழு கேட்டுக் கொண்டதால்... அதை மனதில் வைத்துக் கொண்டு இப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் பட மாளிகைக்கு சென்றனர். அவர்களுக்கு படக்குழு அசலான ஆச்சரியப்பட வைக்கும் உணர்வை வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்கும் மூலக்கூறு பொருளை இந்தியாவின் முதன்மையான உளவுத்துறை அதிகாரியான மிஸ்டர் எக்ஸ் ( சரத்குமார்) இமயமலையின் பனி படர்ந்த சிகரத்தில் மறைத்து வைத்திருக்கிறார்.
அதனை சில காலகட்டத்திற்குப்பிறகு ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு கும்பல் அபகரிக்க முயற்சிக்கிறது. இதை தெரிந்து கொண்ட மிஸ்டர் எக்ஸ் அதனை தடுக்க முயலும் போது அவரை பணய கைதியாக்கி ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
ரஷ்ய நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருளை.. அந்த கும்பல் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய திட்டமிடுகிறது. இந்தத் தகவல் தற்போதைய இந்திய உளவுத்துறையின் தலைவரான இந்திரா வர்மாவிற்கு கிடைக்கிறது.
அவர் இது தொடர்பாக சென்னையில் உள்ள கௌதம் எனும் இளம் உளவுத்துறை அதிகாரியின் தலைமையில் ஒரு குழுவை உருவாக்குகிறார். அந்தக் குழு ரஷ்யாவிற்கு சென்று அணு ஆயுத தயாரிப்பதற்கான மூலப் பொருளை தமிழகத்திற்குள் எடுத்து வருகிறது. அதே தருணத்தில் தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான உலக தலைவர்கள் பங்கு பற்றும் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் போது அணு ஆயுத தாக்குதலை நடத்த எதிரி நாடு திட்டமிடுகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா ? அந்தத் திட்டத்தை இந்திய உளவுத்துறை எப்படி தடுத்தது? என்பதனை விறுவிறுப்பாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
படத்தின் தொடக்கத்தில் அணு ஆயுத தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருள் குறித்த விளக்கமும்.. உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியலும்... பின்னணி குரல் மூலம் விவரிக்கப்படுகிறது. இது படத்தை ரசிப்பதற்கு தூண்டும் தூண்டுகோலாக இருக்கும் என இயக்குநர் நம்பி இருக்கிறார்.
உளவுத்துறையில் பணியாற்றுவதற்கு உளவியல் ரீதியிலான வலிமை பெற்றிருந்தாலும்... சவாலான பணிகளை எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருக்கும் கௌதம் எனும் இளம் உளவுத்துறை அதிகாரிக்கு.. காதல் வருகிறது.
அதனால் அவர் உளவுத்துறை வேலையையே கைவிடும் அளவிற்கு செல்வது போல் அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பது... இயக்குநரின் குழப்பத்தையே காட்சிப்படுத்துகிறது.
மிஸ்டர் எக்ஸ் - ராணா கதாபாத்திர வடிவமைப்பிலும் குழப்பமே மிஞ்சுகிறது.
கதாபாத்திரத்திற்குரிய பொருத்தமான நடிகர்களை தெரிவு செய்வதில் படக் குழு குறிப்பாக காஸ்டிங் டைரக்டர் தனது பொறுப்புகளை தட்டிக் கழித்திருக்கிறார்.
இதுபோன்ற பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நட்சத்திர முகங்களை தெரிவு செய்வது வணிக ரீதியாக அவசியமானது. அதனை படக் குழு தவற விட்டிருப்பது புரியாத புதிர். உதாரணத்திற்கு நரேந்திர மோடியை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கான நடிகர்.
படத்தின் பலமாக காமினி எனும் குறிப்பை குறிப்பிடலாம். தொடக்கத்தில் காமினி என்பது வேறொன்றாக நம்ப வைத்து... உச்சகட்ட காட்சியில் காமினி என்பது வேறு என இயக்குநர் விவரித்திருப்பது உண்மையிலேயே சபாஷ் சொல்ல வைக்கிறது.
உளவுத்துறையில் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திரா மற்றும் வாமன மூர்த்தி ஆகியோருக்கு இடையேயான அதிகார வரைமுறை அதாவது புரோட்டோ கால்ஸ் விதிமுறை ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்குகிறது.
கௌதமின் தந்தை - தங்கை தொடர்பான பிளஷ்பேக் காட்சிகள் அரத பழசு. புதிதாக யோசித்து இருக்கலாம்.
இதுபோன்ற ஸ்பை திரில்லர் திரைப்படங்களில் எக்சன் காட்சிகளும்.. அது தொடர்பான உளவியல் ரீதியிலான ஆர்வமூட்டும் காட்சிகளும் பிரமிப்பையும் சுவராசியத்தையும் ஏற்படுத்தும். ஆனால் இந்தப் படத்தில் அது உச்சக்கட்ட காட்சியில் மட்டுமே ஏற்படுகிறது.
படத்தில் பாராட்டத்தக்க அம்சம் .. கௌதமுக்கும், டொக்டர் கீர்த்தனாவுக்கும் இடையேயான காதல் காட்சிகள்... அவை அழகாகவும், அழுத்தமாகவும் எழுதப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அமரன் சக்கரவர்த்தி கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், எழுத்தும் சிறப்பு. அதனை நடிகர் கௌதம் ராம் கார்த்திக் அற்புதமான உள்வாங்கி நக்கலான நடிப்பை வழங்கி ரசிகர்களின் அன்பை பெறுகிறார். மனு ஆனந்தின் எழுத்தில் இந்த கதாபாத்திரத்தையும் ரசிக்கலாம்.
இரண்டாம் பாதியில் மிஸ்டர் எக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் - நாட்டாமை உள்ளிட்ட பல வேடங்களில் திரையில் தோன்றுவது ரசிகர்களுக்கு ஜில்.
இதுபோன்ற படங்களுக்கு அதிரடியாய் அமைந்திருக்க வேண்டிய பின்னணி இசை மிஸ்ஸிங். இதே படத்திற்கு சாம் சி எஸ் அல்லது ரவி பஸ்ரூர் ... ஆகியோர் இசையமைத்திருந்தால்...! படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் வலிமை கிடைத்திருக்கும். ரசிகர்களும் கொண்டாடியிருப்பார்கள்.
உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் - அவர்கள் எதிர்கொள்ளும் பணி சார்ந்த சவால்கள்- அணு ஆயுத போர் - அது தொடர்பான விழிப்புணர்வு- ஜி 20 மாநாடு - பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய ஏவுகணை தாக்குதல்- இந்தியா, பாகிஸ்தான் , ரஷ்யா - கல்பாக்கம் அணுமின் நிலையம் - இப்படி பல விடயங்களை ஒரே கதைக்குள் இயக்குநர் திணித்திருப்பதால்... எதிலும் ஆழமும் இல்லாமல்... பார்வையாளர்களிடத்தில் தாக்கமும் இல்லாமல்... சாதாரணமாக கடந்து செல்கிறது.
முதல் பாதியில் இருந்த திரைக்கதைக்கான வேகம் ..இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். பல இடங்களில் பார்வையாளர்களுக்கு எழும் பல கேள்விகளுக்கு விடையளிக்காமலே நகர்கிறது திரைக்கதை.
ஆனால் ஆரியா- சரத்குமார்- கௌதம் ராம் கார்த்திக்- மஞ்சு வாரியர்- ஆகியோர் தங்களுடைய கடும் உழைப்பை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.
கதை உளவுத்துறை அதிகாரிகளை பற்றியதாக இருந்தாலும் அதற்கான திரை மொழியில் முதிர்ச்சியும் , தேர்ச்சியும் குறைவு.
அணு ஆயுதம் தொடர்பான விழிப்புணர்வு உண்டாக்கும் உரையாடல் இன்னும் வீரியமாக எழுதப்பட்டிருக்கலாம்.
மிஸ்டர் எக்ஸ் - குறை மாத குழந்தை















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM