ஏட்ரியல் செப்டல் டிஃபெக்ட் எனும் பிறவி இதயகுறைபாடு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை

17 Apr, 2026 | 05:04 PM
image

இன்றைய திகதியில் உலகளவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு ஏட்ரியல் செப்டல் டிஃபெக்ட் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பிறவி இதய குறைபாடு பாதிப்பு இருப்பதாகவும், இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் ..அவர்களின் ஆயுள் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்கியத்துடன் நீடிக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இத்தகைய பாதிப்பு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளுக்கு அதிக அளவில் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானித்து சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏட்ரியல் செப்டல் டிஃபெக்ட் என்பது பிறக்கும் போதே இதயத்தின் மேல் பகுதியில் உள்ள இரண்டு அறைகளுக்கு இடையே அமைந்திருக்கும் சுவரில் துளை இருப்பதாகும். சிலருக்கு இத்தகைய துளையால் நுரையீரலுக்கு இயல்பான அளவைவிட அதிக அளவில் ரத்த ஓட்டத்தை உண்டாக்கி.. இதயம் மற்றும் நுரையீரலை சேதப்படுத்தி விடும். அதே தருணத்தில் இத்தகைய துளை சிறியதாக இருந்தால்... நாளடைவில் அவை தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு இத்தகைய துளையை நவீன சத்திர சிகிச்சை மூலம் சீராக்கி நிவாரணத்தை வழங்குவர்.

மூச்சுத் திணறல், சோர்வு, சீரற்ற இதயத்துடிப்பு, கால்கள்- பாதங்கள்- அல்லது வயிற்றுப் பகுதியில் வீக்கம் , குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு .. ஆகியவை இருந்தால் அதனை இது தொடர்பான அறிகுறியாக எடுத்துக்கொண்டு.. வைத்தியரிடம் சிகிச்சைக்காக செல்ல வேண்டும்.‌

குழந்தை வயிற்றில் இருக்கும் போது கரு வளரும் தருணத்தில் இதயம் முழுமையாக வளர்ச்சி அடையாததால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதனை எக்கோகார்டியோ கிராம் எனும் பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிக்கலாம். அதனைத் தொடர்ந்து  கத்தீட்டரைசேஷன் அல்லது சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதனை சீராக்கி முழுமையாக நிவாரணத்தை வழங்கலாம்.

இத்தகைய பாதிப்புகளை தொடக்க நிலையில் கண்டறிந்து முழுமையான நிவாரண சிகிச்சையை பெறாவிட்டால்... அது சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பு, இதய செயலிழப்பு அல்லது நுரையீரலில் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கி.. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனால் சிறிய வயதில் மூச்சு திணறல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வைத்தியர் அயாஸ் அக்பர் தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லேட்டன்ட் டியூபர்குளோசிஸ் எனும் மறைமுக காசநோய்...

2026-05-21 15:29:33
news-image

பல் உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை...

2026-05-20 14:59:07
news-image

மனச்சோர்வுக்கும் , குடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு...

2026-05-18 14:16:28
news-image

பிறவி கை விரல் குறைபாடு பாதிப்பிற்குரிய...

2026-05-16 19:48:11
news-image

ஸ்பைனா பிஃபிடா எனும் முதுகு தண்டுவட...

2026-05-14 17:25:46
news-image

திடீர் காது கேளாமை பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-13 17:32:26
news-image

சிறுநீரக நீர்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-05-12 15:01:18
news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06