தாய்லாந்தில் சோங்க்ரான் பண்டிகை : “ஏழு ஆபத்தான நாட்களில்” 191க்கு மேற்பட்டோர் பலி 

17 Apr, 2026 | 12:01 PM
image

இந்த ஆண்டு தாய்லாந்தில் பாரம்பரிய புத்தாண்டு தினம் மற்றும் அதன் முக்கிய திருவிழாவான, ஒரு வார காலத்துக்கு கொண்டாடப்படும் 'சோங்க்ரான்' பண்டிகை நாட்களில் 951-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் சிக்கி 191-க்கும் அதிகமானோர் பலியானதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரு வார கால பண்டிகை நாட்களை அங்குள்ள மக்கள் “ஏழு ஆபத்தான நாட்கள்” என்கின்றனர்.

ஆபத்து நிறைந்த இப்பண்டிகை நாட்களில் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பாக அந்நாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையின்படி, சோங்க்ரான் கொண்டாடப்படும் இந்த ஒரு வார காலத்தில் 951-க்கும் அதிக வீதி விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்ததாகவும் மற்றும் 191-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் 42 வீத விபத்துக்கள் வாகனங்களை வேகமாக ஓட்டியதால் இடம்பெற்றுள்ளன. 27.4 வீத விபத்துக்களுக்கு மது பாவனை ஒரு முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. 

அதிகப்படியான விபத்துக்கள் நடைபெறும் காலப்பகுதியாக விளங்கினாலும், தாய்லாந்து பொருளாதாரத்துக்கு இந்த பண்டிகை சுமார் 940 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித் தருவதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10