டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் சம்பளத்தொகையோடு சேர்த்து விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தொழிற்சங்க நிறுவனம் அரசிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேசிய தொழிற்சங்க நிறுவனத்தின் செயலாளர்  மஹிந்த ஜயசிங்க தாபன விதிக்கோவையில் இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.