(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள இலங்கை குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று வியாழக்கிழமை (16) வெளியிட்டது.
இந்த இரண்டு அணிகளுக்கும் வழமைபோல் சமரி அத்தபத்து தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 12 வீராங்கனைகள் இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

வழமையான ஆரம்ப வீராங்கனை விஷ்மி குணரட்னவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
சமரி அத்தபத்து, ஹசினி பெரேரா, இமேஷா துலானி, ஹன்சிமா கருணாரட்ன, கௌஷினி நுதியங்கன, ஹர்ஷித்தா சமரவிக்ரம, நிலக்ஷிகா சில்வா, கவீஷா டில்ஹாரி, தெவ்மி விஹங்கா, மல்கி மதாரா, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, நிமேஷா மதுஷானி ஆகிய 13 வீராங்கனைகள் இருவகை கிரிக்கெட் குழாம்களிலும் இடம்பெறுகின்றனர்.
பியூமி வத்சலா, காவியா காவிந்தி, சேத்தனா விமுக்தி ஆகியோர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றனர்.
அதேவேளை, ரஷமிகா செவ்வந்தி, மிதாலி அயோத்யா ஆகிய இருவரும் மகளிர் சர்வதேச ரி20 குழாத்தில் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ராஜ்ஷஹி விளையாட்டரங்கில் ஏப்ரல் 20, 22, 25ஆம் திகதிகளில் நடைபெறும்.
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்மாகவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு வீராங்கனைகளைப் பரீட்சிக்கும் மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
இப் போட்டிகள் ஏப்ரல் 28, 30, மே 2ஆம் திகதிகளில் நடைபெறும்.
![]()


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM