( செ. சுபதர்ஷனி)
இம்மாதம் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 42 உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய வீதி விபத்துகளில் சிக்கி 44 பேர் மரணித்துள்ளனர் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தாலும், பொலிஸார் எப்போதும் விழிப்புடன் இருந்து கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விசேடமாக வீதி போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டங்களை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். குறிப்பாக, மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்த வேண்டாம் என தொடர்ச்சியாக எச்சரிக்கின்றோம். இளைஞர்கள் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை உயர்த்திக்கொண்டு சாகசங்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம்.
அதேபோல் முச்சக்கர வண்டிகளை இரு சக்கரங்களில் ஓட்டி 'ஹீரோ' ஆக முயல வேண்டாம். இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணிப்பதற்கு பொதுமக்களுக்கு 'வாட்ஸ்அப்' இலக்கம் ஒன்றை வழங்கியுள்ளோம். உங்கள் வாகனங்களின் டேஷ் கமராக்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் பதிவுசெய்யப்படும் இவ்வாறான விதிமீறல்கள் தொடர்பான காணொளிகளை, குறித்த இடம் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு எமக்கு அனுப்பிவையுங்கள். இதுவரை எமக்குக் கிடைத்த 23 வீடியோக்களில் 11 சம்பவங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு புத்தாண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இம்முறை விபத்து மரணங்கள் ஓரளவு குறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களில் 26 மரணங்கள் பதிவாகியிருந்தன. இம்முறை அது 19 ஆகக் குறைந்துள்ளது. எனினும், 10 ஆம் திகதி முதழல் 15 ஆம் திகதிவரையான ஆறு நாடகளுக்குள் நாடளாவிய ரீதியில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய 42 விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், இதன்பொது 44 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். மேலும் வாகனங்களின் புகை வெளியேற்றம் மற்றும் இலக்கத் தகடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.
சில வாகன உரிமையாளர்கள் தரமற்ற மற்றும் விபரம் தெளிவாகத் தெரியாத வகையில் இலக்கத் தகடுகளை மாற்றியமைக்கின்றனர். இரவு நேரங்களில் இவ்வாறான வாகனங்களை அடையாளம் காண்பது கடினம். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களே பெரும்பாலும் இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறான வாகனங்களுக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் தகவல் வழங்க 0703552525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். சூழல் மாசுபடுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM