(நெவில் அன்தனி)
நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இலங்கை ஏ அணி, 2 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற நான்கு நாள் டெஸ்ட் தொடரிலும் வெற்றியீட்டும் குறிக்கோளுடன் களம் இறங்கியுள்ளது.
இத் தொடரில் இரண்டு வீரர்கள் இலங்கை ஏ அணியில் முதல் தடவையாக இடம்பெறுகின்றனர்.
இடதுகை வேகபந்து வீச்சாளர் துலாஜ் சமுதித்த, இடதுகை சுழல்பந்துவீச்சாளர் டிலும் சுதீர ஆகிய இருவரே இலங்கை ஏ அணியில் முதல் தடவையாக இடம்பெறும் வீரர்களாவர்.


ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான முதலாவது உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை ஏ அணி பலமான நிலையில் இருக்கிறது.
சொனால் தினூஷ, லஹிரு உதார, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் இலங்கை ஏ அணியைப் பலப்படுத்தின.
இலங்கை ஏ அணி இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை ஏ அணி சார்பாக முதல் ஏழு துடுப்பாட்ட வீரர்களும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
இலங்கை டெஸ்ட் அணியில் மத்திய வரிசையைப் பலப்படுத்தக்கூடியவர் என கருதப்படும் 25வயதான இளம் வீரர் சொனால் தினூஷ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 90 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
முன்னதாக நிஷான் மதுஷ்க (20), லஹிரு உதார ஆகிய இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை ஏ அணிக்கு ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து அரைச் சதம் குவித்த லஹிரு உதார (61), நுவனிது பெர்னாண்டோ (21) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்ளைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பவன் ரத்நாயக்க 27 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அதன் பின்னர் 5ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் பசிந்து சூரியபண்டார (32) உடன் 45 ஓட்டங்ளைப் பகிர்ந்த சொனால் தினூஷ, 6ஆவது விக்கெட்டில் ரமேஷ் மெண்டிஸுடன் 102 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
சகலதுறை வீரர் மிலன் ரத்நாயக்க 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
இசித்த விஜேசுந்தர 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
பந்துவீச்சில் டிம் ப்றிங்ள் 88 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM