அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

16 Apr, 2026 | 06:42 PM
image

வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து, அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைப் பொலிஸார் சோதனையிடவுள்ளனர். விதி மீறும் வாகனங்கள் உடனடியாகப் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வீதிகளில் இவ்வாறான வாகனங்களைக் கண்டால், பொதுமக்கள் அது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யலாம் என்று கூறியவர், பொதுமக்கள் 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு வாகனத்தின் இலக்கம் அல்லது வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 

பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47