முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான அவதூறுப் பரப்புரை : சி.ஐ.டி.யில் மொட்டு கட்சி முறைப்பாடு

16 Apr, 2026 | 04:11 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் அவதூறுப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இளைஞர் முன்னணியினர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை அளித்தனர். 

தேசிய மக்கள் சக்தியின் (NPP) சமூக வலைதளக் கணக்குகளின் ஊடாக இவ்வாறான போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாட்டை முன்வைப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினர் பசன் கஸ்தூரி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிந்து எனப்படும் தயாகாந்த பெரேரா மற்றும் கட்சி உறுப்பினர் எம். நிஷாந்த ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தனர். 

உண்மைக்குப் புறம்பான இவ்வாறான அநாவசியமான பரப்புரைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது அவர்கள் வலியுறுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23