யோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம் பி ஓ ' படத்தின் பக்தி பாடல் வெளியீடு

16 Apr, 2026 | 03:49 PM
image

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சன்னிதானம் பி ஓ'  படத்தில் இடம்பெற்ற 'ஏறி வந்தோம் ஐயப்பா' எனும் பக்தி உணர்வு ததும்பும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் அமுத சாரதி இயக்கத்தில் உருவாகி உள்ள 'சன்னிதானம் பி ஓ ' திரைப்படத்தில் யோகி பாபு ,சித்தாரா , ரூபேஷ் ஷெட்டி ,வர்ஷா விஸ்வநாத் , பிரமோத் ஷெட்டி , மூணார் ரமேஷ் , வைஷாலினி, வினோத் சாகர், கஜ ராஜ், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார்.

சபரிமலை ஐயப்பனின் அருளை சமூக பக்தி உணர்வுடன் விவரிக்கும் இந்த திரைப்படத்தை சர்வதா சினி கராஜ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மதுசூதன் ராவ் - விவேகானந்தன் - ராமசாமி வேலு- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து  வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'அப்பப்பா கல்லும் முள்ளும் ஏறி வந்தோம் ஐயப்பா கண்ணால உன்னை பார்த்தால் சோகம் தீரும் ஐயப்பா.. 'எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத பின்னணி பாடகர்கள் அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஐயப்பனின் பக்தர்களை குறி வைத்து பக்தி பாடலாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல்... ஐயப்ப பக்தர்களைக் கடந்து இசை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18